அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அமெரிக்க நாட்டிற்கு சென்ற இந்திய பிரதமர் அங்கு நடைபெற்ற பல நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர் இன்று அவர் நாடு திரும்பியுள்ளார்.
அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி நாற்கர கூட்டமைப்பான குவாட்டின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை ஏற்ற இந்திய பிரதமர் அமெரிக்க நாட்டிற்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் மாநாடு உட்பட பல நிகழ்வுகளில் பங்கேற்ற தோடு மட்டுமின்றி பல உரைகளையும் ஆற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் 4 நாள் சுற்றுப்பயணம் முடிந்தபின்னர் இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி நியூயார்க்கிலுள்ள விமான நிலையத்தின் மூலம் இன்று இந்தியாவிற்கு திரும்பியுள்ளார்.