Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

மோடி சாகசம்….. ”1½ கோடி பேர்”…. 3_ஆவது இடம்…. முன்னேறிய டிஸ்கவரி…!!

மோடி பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு சாகச நிகழ்ச்சியை 1½ கோடி பேர் பார்த்துள்ளனர் என்ற டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது.

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்படும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் கடந்த 12_ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டு கட்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், பியர் கிரில்சும் கலந்து கொண்டசாகச நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்றது இந்தியா முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் மீம்ஸ் போட்டி அலப்பறை செய்தனர்.இந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Image result for மேன் வெர்சஸ் வைல்டு’

இந்நிலையில் டிஸ்கவரி தெற்கு ஆசிய நிர்வாக இயக்குனர் மேகா டாடா இந்த நிகழ்ச்சி குறித்து கூறுகையில் , டிஸ்கவரி சேனல் மொத்தமாக 61 லட்சம் பார்வையாளர்களைதான் கொண்டுள்ளது. இதில் ஒளிபரப்பப்படும்  ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியை அதிகபட்சமாக 37 லட்சம் பேர் பார்ப்பார்கள். 12_ஆம் தேதி ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டதால் இந்த நிகழ்ச்சியை 1½ கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

மோடியின் சாகச நிகழ்ச்சி

அதிகமானோர் இந்த நிகழ்ச்சியை பார்த்தது ஒரு சாதனையாகும். முதல் ஒளிபரப்பை தொடர்ந்து மீண்டும் மறு ஒளிபரப்பு செய்ததன் மூலம் ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சியை 4.2 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.தற்போது டிஸ்கவரி சேனல் ஜீ ,  ஸ்டார் பிளஸ் சேனல்களுக்கு அடுத்ததாக 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.

Categories

Tech |