24 மணி நேரமும் பிரதமர் மோடியை மட்டும் டிவியில் காண்பிக்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நேற்று பீகார் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறுகிறார். இவ்வளவு நாள் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். இப்பொழுது கூறுகிறீர்கள் 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று. கடந்த ஆறு வருடங்களாக என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் ? தேர்தல் வரும்போது வாக்குறுதி அளிக்கிறீர்கள். 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று. இது பீகாரில் உடைய விஷயம் மட்டும் அல்ல. இந்தியாவினுடைய விஷயம். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.
நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்குவது பெரிய தொழிலதிபர்கள் அல்ல. நாட்டில் வேலைவாய்ப்பை விவசாயிகள், சிறிய வியாபாரி, நடுத்தர வியாபாரிகள் வழங்குகிறார்கள். இவர்களுடைய முதுகெலும்பை நரேந்திர மோடி ஜிஎஸ்டி, கொரோனா மூலமாக உடைத்துவிட்டார். இந்த நாட்டில் இப்பொழுது தங்களுடைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கண்டிப்பாக வழங்க முடியாது. இவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யட்டும் ? இந்த நாடு தன்னுடைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியாது.
காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது.அப்போது கிராமத்தில் மக்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். நகரத்தில் ஜவகர்லால் நேரு திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒருபுறம் கிராமத்திற்கு உதவி செய்துள்ளோம், மறுபுறம் நாங்கள் நகரத்திற்கும் உதவி செய்து கொண்டிருந்தோம. நம்முடைய தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கு அவர்களுடைய கடனை தள்ளுபடி செய்தோம். உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.
நாங்கள் தொழிலாளர்களுக்கும் மறுபுறம் விவசாயிகளுக்கும் உதவி அளித்து கொண்டிருந்தோம். நகரத்திற்கு கிராமம் உதவி செய்தது, கிராமத்திற்கு நகரம் உதவி செய்தது. நகரத்தை முன்னேற்ற வேண்டும் என்றால் கிராமத்தைப் பாதுகாக்க வேண்டும். கிராமத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால் நகரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும். நீங்கள் எப்போதும் நகரத்திற்கும் – கிராமத்திற்கும் இடையில் இருக்கிறீர்களோ அப்பொழுது சந்தோசமாக இருக்கும். ஆனால் நரேந்திரமோடி கிராமத்தின் வளர்ச்சியையும் அழித்து விட்டார். நகரத்தினுடைய முன்னேற்றத்தையும் அழித்துவிட்டார்.
இந்த நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் நகரத்தையும் காப்பாற்ற வேண்டும், கிராமத்தையும் காப்பாற்ற வேண்டும். தொழிலாளர்களுடைய பாதுகாப்பையும், விவசாயிகளுடைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். சிறு வியாபாரிகளையும் காப்பாற்ற வேண்டும். நடுத்தர வியாபாரிகளையும் காப்பாற்ற வேண்டும். ஆனால் நரேந்திர மோடியும், நித்திஷ்குமாரும் சில குறிப்பிட்ட மக்களுக்காக தங்களுடைய அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பீகாரில் பல விதமான பேச்சுகள் நடந்து கொண்டிருக்கிறது.
என்னுடைய பேச்சு இப்போது நடந்து கொண்டிருக்கிறது, மோடியும் பேசுவார். நீங்கள் தொலைக்காட்சியை பாருங்கள். உங்களுக்கு தொலைக்காட்சியில் காங்கிரஸ் தெரியாது, ராகுல்காந்தி தெரியமாட்டார், உங்களுக்கு தொலைக்காட்சியில் வெறும் நரேந்திர மோடி மட்டுமே தெரிவார். நீங்கள் யோசித்து இந்த கேள்வி கேளுங்கள் 24 மணி நேரமும் நரேந்திர மோடியை ஏன் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள் ? 24 மணி நேரமும் நரேந்திரமோடியை காட்டுபவர்கள் ஏன் ராகுல் காந்தியை பற்றி யோசிப்பது கிடையாது ?
ஏனென்றால் விஷயம் மிகவும் சாதாரண விஷயம். நரேந்திரமோடி உங்களுடைய பணத்தை உங்களிடம் இருந்து திருடுகிறார். சிறு வியாபாரிகள், சிறு கடைகளை நஷ்டமடைய வைக்கிறார்கள் . இந்தியாவில் உள்ள மூன்று தொழிலதிபர்களை முன்னேற்றுவதற்காக மோடி பாடுபடுகிறார். அவரிடம் அனைத்து பணத்தையும் அளித்திருக்கிறார். எனவே அவர்கள் 24 மணி நேரமும் நரேந்திரமோடியின் முகத்தை தொலைக்காட்சியில் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மூன்று நான்கு பணக்கார தொழிலதிபர்கள் நரேந்திர மோடியால் நன்றாக இருக்கிறார்கள். அவர்கள் 24 மணி நேரமும் நரேந்திரமோடியை டிவியில் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என ராகுல் தெரிவித்தார்.