மோடி ஒரு இரும்பு மனிதர் அமித்ஷா அவரின் இணைப்பு இரும்பு மனிதராக செயல்படுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ,ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்து வாக்கெடுப்பின் மூலம் இது நிறைவேற்றப்பட்ட்து.இதற்க்கு அரவிந்த் கெஜ்ரிவால் , மாயாவதி , சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் , தமிழிசை சௌந்தர்ராஜன் கூறுகையில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்த செய்தது ஓட்டுக்கானதல்ல. அது நாட்டுக்கானது. கலவர பூமியாக இருந்த காஷ்மீர் தற்போது ஒரு சுற்றுலாத் தலமாக , பழைய பெருமையை பெற்றுள்ளது.மோடி ஒரு இரும்பு மனிதர் அமித்ஷா அவரின் இணைப்பு இரும்பு மனிதராக செயல்படுகிறார் என்று தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.