பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் நடவடிக்கைகளால் நாடு ஆபத்தில் உள்ளதாக, சிவசேனா-வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த தலையங்கத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் என்ன விரும்பினார்களோ, அதுநடந்து கொண்டு இருக்கிறது.நாடு ஆபத்தில் உள்ளது. பிரிவினைவாத அரசியல் நாட்டிற்கு ஆபத்தானது. மும்பையில் 2008-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், முகமூடி அணிந்துஇருந்தனர். அதேபோலத் தான் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தாக்குதலில் ஈடுபட்டவர்களும் மூகமுடி அணிந்து இருந்துள்ளனர்.
பல்கலைக்கழகங்கள் அரசியலில் இருந்து விலகிஇருக்க வேண்டும் என்றுபாஜக கூறியுள்ளது. ஆனால்,கடந்த 5 ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களில் வன்முறையையும், அரசியலையும் கொண்டு வந்தவர்கள் யார்? அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்கள் சித்தாந்தத்துடன் உடன்படாதவர்களை அழிக்கும் கொள்கையையார் செயல்படுத்துகிறார் கள்?குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் இந்து – முஸ்லிம் கலவரத்தை பார்க்கநீங்கள் (பாஜக) விரும்பினீர்கள். ஆனால் அது நடக்கவில்லை. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம்கள் மட்டும் போராடவில்லை. இந்த புதிய சட்டத்திற்கு எதிராக இந்துக்களும்போராடிக் கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறு ‘சாம்னா’ குறிப்பிட்டுள்ளது.