சுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை-2020 மிக பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த வரைவு அறிவிக்கையினை மிக கடுமையாக எதிர்த்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த வரைவு அறிவிக்கையானது, பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடிய முறைகளைக் கொண்டிருக்கிறது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் சுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம் என்றும், சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டிய சமூக கடமை மத்திய அரசுக்கு இருப்பதாகவும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை 2020ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும். வறுமையை ஒழிக்காமல் சுற்றுச்சூழலை கட்டாயம் பாதுகாக்க முடியாது.
அதனால் சுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம். பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் ஆகிய மூன்றும் ஒன்றோடோடு ஒன்று ஒருங்கிணைந்து இருக்கிறது.மேலும் கடந்த 6 வருடங்களாக எந்தவித சிந்தனையும் இல்லாமல் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது”என்று சோனியா காந்தி, மோடி அரசை குற்றம் சாட்டியுள்ளார்.