Categories
தேசிய செய்திகள்

உலக தரத்துக்கு நீங்களே செய்யுங்க…..! இளைஞர்களை நம்பும் மோடி…. !!

உலக தரமிக்க செயலிகளை உருவாக்க பிரதமர் மோடி இளைஞர்களுக்கு சவால் விடுத்துள்ளார்

இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அதன் காரணமாக இரண்டு நாடுகள் இடையே இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டது. இச்சூழலில் இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக இருக்கும் சீனாவிற்கு சொந்தமான 59 செயலிகளை சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு தடை செய்தது. இந்நிலையில் உலக தரமிக்க இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் என்றும் இதற்காக “ஆத்மனிர்பார் பாரதத்திற்கான குறியீடு” என்ற சவாலில் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி இந்திய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “உங்களிடம் இது போன்ற தயாரிப்புகளை உருவாக்குவதற்கான யோசனை அல்லது இதுபோன்ற தயாரிப்பு இருந்தால் இந்த சவால் உங்களுக்கானது. தொழில்நுட்ப வட்டாரத்தில் இருக்கும் எனது நண்பர்கள் அனைவரையும் இந்த சவாலில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உள்நாட்டு பயன்பாடுகளை புதுமைப்படுத்தவும், ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் தொடக்க மற்றும் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் அமைப்பினரிடையே பெரும் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் காண்கிறோம்.

இன்று முழு தேசமும் ஒரு ஆத்மனிர்பார் பாரதத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபடும்போது அவர்களின் முயற்சிக்கான வழிகாட்டுதல்களையும், கடின உழைப்புக்கான வேகத்தையும், நம் சந்தையை திருப்திப்படுத்தக்கூடியதாகவும் போட்டியிடக்கூடியதாகவும் இளைஞர்கள் உருவாக்கும் பயன்பாடுகள் அமைய வேண்டும். அதனால் அவர்களின் திறமைக்கு வழிகாட்டுதல் ஏற்படுத்த இது சிறந்த வாய்ப்பாகும்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |