ஹிந்து மதத்தினரை தவறாக ஆ.ராசா பேசினார் என எழுந்த குற்றசாட்டு குறித்து விளக்கமளித்த அவர், அரசியலமைப்பு சட்டம் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்ட கவர்னர் சொல்கிறார், சனாதான தர்மம் தான் சிறந்தது என்று. நான் சொல்கிறேன் அரசியலமைப்பு சட்டத்தின் மீது நீங்கள் எடுத்த உறுதிமொழி உண்மையானால், அரசியல் சட்டத்திற்கு புறம்பாக இருக்கின்ற சனாதனம் எதுவென்று தெரியுமா? என பேசினார்.
மேலும் கையில் வைத்திருந்த புக்கை காட்டி பேசிய ஆ.ராசா, என் கையில் புத்தகம் இருக்கிறது. சனாதான தர்மா. இந்த புத்தகத்தை வெளியிட்டது பப்ளிஸ்ட் பை த மேனேஜிங் கமிட்டி, ஜெனரல் ஹிந்து காலேஜ், பனாரஸ். மோடி தொகுதி, வாரணாசி தொகுதி. இங்கதான் இந்துக்களுக்கு எல்லாமே ஆரம்பமாகிறது. 1916இல் தான் சனாதான தர்மத்தை பற்றி எழுதினார்கள். இப்போ ரெண்டு விஷயம் தெரிஞ்சுக்கங்க…
அரசியல் சட்டம் வந்ததற்குப் பிறகு இந்து என்பதற்கு அர்த்தம் வேறு என்று சொல்றாங்க, ஒத்துக்கணும். ஆனால் கவர்னர் என்ன சொல்லுறாரு ? சனாதான தர்மம் என்ன சொல்லுது ? சனாதான தர்மத்துக்கு எது அடிநாதம் ? சனாதான தர்மம் என்பது நம்முடைய பழைய தீர்க்கமான சட்டத்தின்படி, வேதத்தின் அடிப்படையிலும், புனித புத்தகங்களின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது.
இது ஆரிய மரபினத்தால் கொண்டுவரப்பட்ட ஆரிய மதம். ஆரியன் என்றால் ஒரு பெரிய சிறப்பான உன்னதமான இனத்திற்கு கொடுக்கப்பட்ட பெயர். ரொம்ப நல்ல ஒழுக்கமுடையவர்கள், இதற்கு முன்னாள் இருந்த இனத்தவர்களை விட தோற்றத்தில் நன்றாக இருப்பவர்கள். இவர்களுக்குத்தான் இந்த சமாதான தர்மம்.
சனாதானத்தின் அடிநாதம் மனுஸ்ருதி, எக்னகலிஸ்ருதி சாங்களித்தியஸ்ருதி, பிரசன்னஸ்ருதி. இந்த நான்கில் மனு என்பவர் தான் இந்துக்களுக்கான சட்டத்தை தந்தவர். அப்போ மனு சட்டம் இதுதான் சொல்லுது என அந்த புத்தகத்தின் முன்னுரையை படித்துக் காட்டி விளக்கினார்.