இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே உகந்த நேரம் என பிரதமர் மோடி தாய்லாந்து தொழில் அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தாய்லாந்து பேங்காக்கில் நடைபெற்ற 16 வது ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.அப்போது பிற நாட்டுத் தலைவர்களுடன் ஒரே மேடையில் வீற்றிருந்த மோடி அவர்களுடன் உற்சாகமாக கைகுலுக்கினார். இதையடுத்து இந்தியா ஆசிய நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை வரவேற்பதாகவும், இந்தியா பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா மேற்கொள்ளும் கொள்கைகள் முக்கியமானதாக உள்ளது என்று மோடி தெரிவித்தார். கடல் வழிப் போக்குவரத்தை ஆசிய நாடுகளுடன் விரிவுபடுத்த இந்திய நாடுகள் தயாராக இருப்பதாகவும் மோடி கூறினார்.
பின்னர் ஆதித்யா பிர்லா குழுமத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மோடி , கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 210 லட்சம் கோடி உயர்ந்ததாகவும் , இதனால் 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத்தை எட்டு என்றும் தெரிவித்தார். தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடாக இந்தியா இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, உற்பத்தி திறன் கட்டமைப்பு வசதிகள் பெருகி உள்ளன என்றும் , ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே உகந்த நேரம் என்றும் மோடி கூறினார்.