எய்ம்ஸ் மருத்துவமனை என்பது வெறும் பொய் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த விழாவில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், அதிமுக என்ற கட்சியை தோக்க போகுது, தோக்க போகிற கட்சிக்கு யாரு முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால் என்ன ? அப்படின்னு பன்னீர்செல்வம் தன்னை மாட்டி விட்டதே தெரியாமல் பழனிச்சாமி மகிழ்ச்சியில் இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அத்தனையும் பொய்கள் தான். பொய்களுக்கு கூடாரமாக பழனிசாமி மாறியிருக்கிறார் அந்த அறிக்கைதான் அதற்கு உதாரணம்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்ததாக பழனிச்சாமி சொல்றாரு. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அங்க போய் பார்த்தீங்கன்னா தான் தெரியும் ? வெறும் பெயர் பலகை மட்டும்தான் வச்சிருக்காங்க, எந்த பணமும் ஒதுக்கவில்லை, மோடி ஆட்சியில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? இதுவரை தெரியல. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்திற்காக வந்த பிரதமர் மோடி, அவர் சொல்லிட்டு போய்ட்டார்.
கண்துடைப்புக்காக ஒரு கல்வெட்டை திறந்து விட்டு போயிட்டாரு. அதன் பிறகு ஏதாவது நடந்து இருக்கா.? செங்கல் ஆவது எடுத்து அடுக்கி வைக்கப்பட்டு இருக்கா? 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிவித்ததில் இருந்து கடந்த 5 ஆண்டுகாலமாக எய்ம்ஸ் நாடகங்கள்தான் நடந்துகிட்டு இருக்கே தவிர, எய்ம்ஸ் மருத்துவமனை வந்தபாடில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்ததா சொல்றது பொய் என முக.ஸ்டாலின் தெரிவித்தார்.