இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிகையாளர் அதீஷ் தசீர். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான குடியுரிமை அட்டை- யுடன் (Overseas Indian Citizenship Card – OIC) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வாழ்ந்துவரும் ஆதீஷ், இந்திய அரசியல் குறித்து பத்திரிகைகளில் பல்வேறு கட்டுரை எழுதி வருகிறார்.அந்த வகையில், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். ‘Divider in Chief’ என்ற தலைப்பிடப்பட்டிருந்த அந்த கட்டுரையில், பிரதமர் மோடி இந்தியாவில் மதப் பிரிவினைவாதத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்தக் கட்டுரையானது இந்தியா முழுவதும் பேசுபொருளானது. பாஜக தொண்டர்கள் அதீஷை எதிர்த்து ட்விட்டரில் கட்டமாக கருத்துகளை பதிவுச் செய்தனர்.இந்நிலையில், தன் குடியுரிமை அட்டையைப் புதுப்பிப்பதற்காக இந்திய தூதரகத்தில் அதிஷ் தசீர் சமீபத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பத்தை உள்துறை அமைச்சகம் நிகராதித்துவிட்டது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், அதிஷ் தசீர் தன்னுடைய PIO (Person of Indian Origin) விண்ணப்பத்தில், தன்னுடைய பெற்றோர் பாகிஸ்தானில் பிறந்தவர்கள் என்ற தகவலை மறைத்துவிட்டார். அதனால் அவ்விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டோம் எனவும், அவருக்கு இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனவும், ஆனால் அந்த நோட்டீஸுக்கு பதிலளிக்க தவறியதால், இந்தியக் குடியுரிமை சட்டம் 1955-ன் படி அவருடைய இந்தியக் குடியுரிமை ரத்து செய்யப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்க தனக்கு வெறும் 24 மணி நேரமே கொடுத்திருந்ததாகவும், சட்டப்படி தனக்கு 21 நாட்கள் கொடுத்திருந்தாக வேண்டும் என அதீஷ் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.அதீஷ் தசீரின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டதற்கு பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள வரலாற்று நிபுணர் ராமசந்திர குஹா, “அப்பத்தனமானது, இது பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்ட ஒன்றாகும் ” என இந்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.