Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”ஷி ஜின்பிங்குடன் சந்திப்பு” நினைவு பரிசு வழங்கிய மோடி …..!!

மாமல்லபுர சந்திப்பில் பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்_க்கு நினைவு பரிசினை வழங்கினார்.

மாமல்லபுர கலைகளை கண்டு ரசித்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர். இதற்காக கடற்கரை கோவில் மின் விளக்குகளால் ஜொலித்தது. இந்த நிகழ்ச்சியில் பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த  நிகழ்ச்சிகளில் ராமாயண காவியம் நடன வடிவில் நிகழ்த்தப்பட்டது. பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் நாட்டியம் நிகழ்த்திய குழுவினருடன் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து காந்தியின் ரகுபதி ராகவ ராஜாராம் இசையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. பின்னர் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நினைவுப் பரிசுகளாக நாச்சியார் கோயில் அன்னம் விளக்கு, தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை பிரதமர் மோடி வழங்கினார். தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பரிசுகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

Categories

Tech |