Categories
மாநில செய்திகள்

வேஷ்டி சட்டையில் மோடி ….. கைகுலுக்கி சீன அதிபரை வரவேற்றார் ….!!

மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி , சீன அதிபர் ஷி ஜின்பிங்  கைகுலுக்கி சந்தித்துக் கொண்டனர்.

இன்று காலை சென்னை வந்த பிரதமர் மோடி கோவளம் பிஷேர்மேன் கோவ் நட்சத்திர  ஓட்டலிலும் , சீன அதிபர் ஷி ஜின்பிங் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலிலும் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். இதை தொடர்ந்து மாலை மகாபலிப்புரத்தில் நடைபெறும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்புக்காக மகாபலிபுரத்திற்கு கிளம்பிய சிறிது நேரத்தில் சீன அதிபரும் , பிரதமர் மோடியும் மகாபலிபுரம் வந்து இரு தலைவர்களும் கைகுலுக்கி வரவேற்றுக் கொண்டனர். தமிழர் பண்பாட்டை உயர்த்தும் வகையில் பிரதமர் மோடி வேஷ்டி , சட்டை , தோளில் தூண்டு அணிந்திருந்தார். இது பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது.

Categories

Tech |