Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பாஜகவை கைவிட்ட RSS” அச்சத்தில் மோடி…. மாயாவதி பரபரப்பு தகவல்…!!

பாஜகவை RSS கைவிட்டுவிட்டதால் பிரதமர் மோடி அச்சத்தில் இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்தியாவில் அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி_க்கு மாற்றாக சமஜ்வாதியும் , பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

இந்நிலையில் நேற்று லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறுகையில் , மோடி தலைமையிலான  பாஜக அரசானது  மூழ்கும் கப்பல் என்று அனைவருக்கும் தெரியும். இதற்கு மிகப்பெரிய உதாரணம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பாஜகவிற்க்காக வேலை செய்யவில்லை. RSS அமைப்பு பாஜக கட்சியை கைவிட்டு விட்டது என்று தெளிவாக தெரிகின்றது. இதனால் பிரதமர் மோடி மிகவும் அச்சத்தில் இருக்கிறார் என்று மாயாவதி கூறியுள்ளார்.

Categories

Tech |