பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று அரசுமுறை பயணமாக மாலத்தீவுக்கும் நாளை கேரளாவுக்கும் செல்ல இருக்கிறார் .
தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடி கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்துள்ளார். இதனையடுத்து கிருஷ்ணன் கோவில் துலாபாரத்தில் அமர்ந்து தனது எடைக்கு நிகராக தாமரை மலர்களை வழங்கினார் பிரதமர் மோடி.
இதனையடுத்து இன்று அரசு முறை பயணமாக மாலதீவுக்கும், நாளை இலங்கைக்கும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள இருக்கிறார் பிரதமர் மோடி. இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற குண்டு வெடிப்பு நடந்த இடங்களை நேரில் சென்று பார்வையிட இருக்கிறார் பிரதமர் மோடி. மேலும் குண்டு வெடிப்புக்குப் பின் இலங்கைக்கு செல்லும் முதல் வெளிநாட்டு அரசியல் தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாலத்தீவு பயணத்தில்இருவேறு நாடுகளுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாக பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார் மற்றும் இலங்கையில் தீவிரவாத ஒடுக்குமுறை குறித்தும் இலங்கை- இந்தியா ஒற்றுமை குறித்தும் பேச இருக்கிறார் .