Categories
தேசிய செய்திகள்

உள்ளூர் நிறுவனங்களை உலகளாவிய நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின் நோக்கம்: நிர்மலா சீதாராமன்!

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிடவுள்ளார்.

நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, ” ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும்” என தெரிவித்தார். தற்போது, இத்திட்டம் தொடர்பான அறிவிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி நேற்று ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு அறிவித்தார். நாட்டின் பல்வேறு துறையினரோடு ஆலோசனை நடத்திய பின், நிதி தொகுப்பு குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மக்கள் தொகை, அமைப்பு முறை மற்றும் தேவை என்ற 5 தூண்கள் நாட்டிற்கு அவசியம் என அவர் கூறினார். பிபிஇ கிட்டுகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் உற்பத்தியின் வேகம் அதிகரித்துள்ளது என தெரிவித்தார். உள்ளூர் நிறுவனங்களை உலகளாவிய நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |