பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் வீடுகளை பயனாளிகளிடம் பிரதமர் ஒப்படைத்துள்ளார்.
நகர்ப்புறங்கள், ஊர்ப்புறங்களில் வாழும் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கும் பிரதமர் வீட்டு வசதித் திட்டம் 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அவ்வாறு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள 1 லட்சத்து 75 ஆயிரம் வீடுகளைப் பிரதமர் மோடி பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.
இதேபோல் 2022 மார்ச் மாதத்திற்குள் மொத்தம் 2 கோடி வீடுகளைக் கட்டிக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட ஒரு லட்சத்து 75 ஆயிரம் வீடுகளைப் பயனாளிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி, ஒப்படைத்து அவர்களிடம் உரையாடினார். அப்போது பேசியவர் , கொரோனா சூழலில் வளர்ச்சித் திட்டங்கள் தடைபடாமல் நடந்து வருவதாக கூறினார்.