அருண்ஜெட்லி மறைவில் கலந்து கொள்ள முடியாததால் பிரதமர் மோடி அருண் ஜெட்லி வீட்டிற்கு சென்று குடும்பத்தருக்கு ஆறுதல் கூறினார்.
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். பின்னர் அவரது உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து இறுதி ஊர்வலமாக டெல்லியில் உள்ள நிகாம் போத் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்த இறுதி ஊர்வலத்தில் பாஜக மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நிர்வாகிகள் உட்பட பலரும் பங்கேற்றனர். பிரதமர் மோடி பல்வேறு நாடுகளின் சுற்றுப்பயணம் மற்றும் G 7 உலக நாடுகள் மாநாட்டில் பங்கேற்றதால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி தற்போது நேரடியாக அருண் ஜெட்லி வீட்டிற்கு வந்து அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உடனிருந்தார்.