Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி இஸ் கிரேட்… நம்மள பாராட்டியுள்ளார்… பெருமைப்பட்ட அமைச்சர் …!!

பிரதமர் மோடி தமிழக முதல்வரை, தமிழக அரசை பாராட்டியுள்ளார் என அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,கட்சியின் தலைமை கழகத்தில் செயற்குழு நடக்க இருக்கிறது. அந்த செயற்குழுவில் சில முடிவுகள் எடுப்பார்கள்.  எந்த முடிவெடுத்தாலும், தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்ற ஒரே நோக்கத்துடன்  அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பிரதமர் மோடி சிறந்த நிர்வாகி, மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லக்கூடியவர். அப்படிப்பட்ட நம்முடைய பாரத பிரதமர் அவர்கள்….  நம்முடைய முதல்-அமைச்சர் செயலை, முதலமைச்சரின்  நிர்வாகத்தை,  நம்முடைய தமிழ்நாட்டில் செயல்படுகின்ற கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்க கூடிய அனைத்துதுறை அலுவலர்களையும் பாராட்டி பேசி இருக்கின்றார்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்களும் சரி, இளைஞர்களும் சரி, ஸ்டாலின் எது பேசினாலும் படிப்பது கிடையாது, பார்ப்பதும் கிடையாது. காரணம் அவர் காலையில் எந்திரிச்ச உடனே இந்த அரசை பற்றி தான் பேசுவார். முதலமைச்சரை பற்றி பேசுவார் இல்லை என்றால் துணை முதல்வரை பற்றி பேசுவார்.  அவரின் ஆசை நிறைவேறாத ஆசையாகவே போகப் போகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

Categories

Tech |