Categories
தேசிய செய்திகள்

“வரி பயங்கரவாதம்”… மக்களிடையே பொய் கூறுகிறார் மோடி… ரன்தீப் சிங் குற்றச்சாட்டு…!!

பிரதமர் மோடியின் அரசாங்கம் பல ஊழல்களை செய்து வருகிறது என ரன்தீப் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

சுதந்திர தினத்துக்கு ஒரு நாளைக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி “வெளிப்படையான வரிவிதிப்பு” என்ற புதிய தளத்தை  தொடங்கினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “நரேந்திர மோடியின் அரசாங்கம் வரி பயங்கரவாதம் மற்றும் ரெய்டு ராஜ்ஜியம் இவற்றை நடத்தி வருகிறது. சென்ற 6 வருடங்களில் வரி விதிப்பு 129 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நேர்மையான வரி விதிப்பாளர்களை கௌரவிக்க திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சில குளறுபடிகள் இருக்கின்றன. இவைகள் கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக்க வசதி செய்யும். நரேந்திர மோடி 80 லட்சம் கோடி கறுப்பு பணத்தை வெளிநாட்டிலிருந்து திரும்ப கொண்டுவருவதாக ஆட்சிக்கு வந்தார். ஆனால் தற்போது வரி விதிக்காதவர்களுக்கு மன்னிப்பு திட்டங்களை அறிவித்து மக்களிடையே பொய்யை கூறிவருகிறார்” என்றார்.

Categories

Tech |