Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி உலகிற்க்கே வழிகாட்டுகிறார்…! நம்மை கண்டு பயப்படுறாங்க… கெத்தாக பேசிய எல்.முருகன் ..!!

பிரதமர் மோடி உலகிற்க்கே வழிகாட்டுகின்றார் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று வேல் யாத்திரை தொடங்கியது. வேல் யாத்திரைக்கு தடை வித்த தமிழக அரசு பாஜகவினரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். இந்த வேல் யாத்திரை பயணத்தில் தொண்டர்களிடம் பேசிய பாஜக தலைவர் எல். முருகன் கூறுகையில்,

பிரதமர் நரேந்திர மோடி உலகத்திற்கே வழி காட்டியாக இருக்கின்றார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமையின் கீழ் இன்றைக்கு உலக நாடுகளே இந்தியாவைப் பார்த்து பயந்து போய் இருக்காங்க. உலக நாடுகளுக்கு நாம உதவி செய்கிறோம். கொரோனா நேரத்தில் பாரத தேசத்தில் இருந்து தான் மருந்து, மாத்திரைகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டது.

அமெரிக்கா  வல்லரசு நாடு என்று சொன்னாங்க. 2020ல் இந்தியா வல்லரசு ஆகும்னு நம்முடைய அப்துல் கலாம் ஐயா அவர்கள் சொன்னாங்க. அவருடைய கனவை நிறைவேற்றியவர் நரேந்திர மோடி. இன்றைக்கு இந்தியா வல்லரசாக போய்க்கொண்டிருக்கிறது. இன் நாம் பல்வேறு நலத்திட்டங்களை செய்து உள்ளோம். தமிழகத்தில் நம்முடைய கூட்டணி ஆட்சி வந்தே தீரும். இதே இலட்சியத்தோடு நம்முடைய இலக்கை நோக்கி செல்வோம். வீறுநடை போட்டு செல்வம் என எல்.முருகன் தெரிவித்தார்.

Categories

Tech |