Categories
உலக செய்திகள்

ஜி-20 மாநாட்டில் இத்தாலி பிரதமரை சந்தித்த மோடி…. ட்விட்டரில் வெளியிட்ட தகவல்…!!!

நரேந்திர மோடி இத்தாலி நாட்டின் பிரதமரை ஜி 20 மாநாட்டில் சந்தித்து பேசியதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஜி-20 உச்சி மாநாடானது இந்தோனேசிய நாட்டின் பாலி நகரத்தில் நடக்கிறது. இரு தினங்களாக  நடக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஜி-20 யில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில், ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலி நாட்டின் பிரதமரான மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

இது பற்றி நரேந்திர மோடி, தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, பிரதமர்  ஜியார்ஜியோ மெலோனியை சந்தித்தது சிறப்பானதாக அமைந்தது. நாங்கள் 2 நாடுகளும் பாதுகாப்பு, கலாச்சாரம் காலநிலை மாற்ற ஊக்குவிப்பு, எரிசக்தி ஆகிய துறைகளில் எந்த வகையில் சேர்ந்து இயங்க முடியும் என்பது பற்றி பேசினோம்.

பொருளாதார அடிப்படையில் இரண்டு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவது குறித்து  ஆலோசித்தோம் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |