Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் – மோடி வேண்டுகோள் …!!

உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்குறேன் யாரும் வெளியே வராதீங்க என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. நோய்த் தொற்றை தடுக்க இது ஒன்றே வழி. அடுத்த சில நாட்களுக்கு வெளியே வருவதை முற்றிலும் தவிருங்கள். வீட்டுக்குள்ளேயே இருங்கள்.

வீட்டுக்குள்ளேயே தனித்து இருங்கள்.நாடு மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும். ஆனால், இதனை தொடருவதை தவிர வேறு வழி இல்லை. ஒவ்வொரு குடிமகனையும் காப்பாற்றுவதே என் முதல் பணி. நீங்களே ஒரு லட்சுமண ரேகையை போட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால். கொரோனா உங்களை தாக்கக் கூடும். மக்கள் ஊரடங்கில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றீர்கள், ஒவ்வொரு இந்தியனாலும் அது வெற்றி பெற்றது .

சமூக விலகலே கொரோனாவை விரட்டி அடிப்பதற்கான ஒரே வழி, அதைத் தவிர வேறு எந்த பாதுகாப்பு வழிகளும் இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ , அங்கேயே இருங்கள். உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன். அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்துவது சாத்தியம் என்று மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |