Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மோடி சொல்லுவாங்க, நாங்க செயல்படுத்துவோம் – தமிழக அரசு பளிச் பதில் …..!!

ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி அறிவிக்கும் அறிவிப்பை தமிழ்நாடு முழுமையாக கடைபிடிக்கும் என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு குறித்து தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகள், கொரோனா கட்டுப்படுத்துதல் பகுதிகளில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை நடத்தப்படும்.ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாடு தழுவிய முடிவை பிரதமர் மோடி அறிவிப்பார். பிரதமரின் அறிவிப்பை ஏற்று செயல்படுத்துவோம்.

ஊரடங்கு கடைபிடிக்கும் மக்களுக்கு பிரதமர் மோடி நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி அறிவித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை அரசு எடுக்கும். பிரதமர் எத்தனை நாட்கள் அறிவிப்பார் என்பதை பொருத்து தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படும். ஊரடங்கை பொருத்தவரை ஒரு மாநிலம் எடுக்கும் முடிவல்ல என்று அவர் தெரிவித்தார். 

Categories

Tech |