Categories
தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள் வைரல்

வேஷ்டி கட்டி கெத்து காட்டிய மோடி.. ”நானும் தமிழன் தான்” …. வைரலாகும் புகைப்படம் …!!

பிரதமர் மோடி வெள்ளை வேஷ்டி , வெள்ளை சட்டை , தோளில் துண்டு போட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

மகாபலிபுரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பிரதமர் மோடி வெள்ளை வேஷ்டி , வெள்ளை சட்டை , தோளில் தூண்டு என ஆடை அணிந்து நான் என்றும் தமிழை விரும்புவேன்.

தமிழை ஆதரிப்பேன் , தமிழ் மக்கள் எனக்கு பிடிக்கும் என்று உணர்த்தும் வகையில் ஒட்டு மொத்த தமிழர்களின் மனதில் இடம் பிடித்தார். அதே போல சீன அதிபர் ஷி ஜின்பிங்_கும் வெள்ளை சட்டை அணிந்து வந்தார். இருவரும் கைகுலுக்கி வரவேற்றுக் கொண்டனர். மோடி வேஷ்டி , சட்டை அணைந்த புகைப்படம் தமிழர்களால் பாராட்டப்பட்டதோடு வைரலாகி வருகின்றது.

மோடியின் வேஷ்டி கட்டிய புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதில் வேஷ்டி கட்டிய தமிழன் , வந்துட்டேனு சொல்லு , கெத்தா , ஸ்டைலா என்று பலவிதமான வசனங்களை பதிவிட்டு தங்களின் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.பிரதமர் மோடி வேஷ்டி , சட்டை போட்ட புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

 

Categories

Tech |