”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்று பூங்குன்றனார் கூறிய புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி ஐ.நா சபையில் பிரதமர் மோடி பேசினார்.
அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி வாஷிங்டனில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றுவதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.இந்தியாவில் மிகப்பெரிய அளவில் சுகாதார திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை உலகம் முழுவதும் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தில் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. புதிய இந்தியாவை நாங்கள் உருவாக்கி வருகிறோம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்ற வாசகத்தை ஐநாவில் நான் பார்த்தேன். இந்தியாவிலும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என விழிப்புணர்வு செய்து வருகிறோம் என்றும் கூறினார்.
மேலும் அவர், கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி புகழ்ந்து பிரதமர் மோடி பேசினார். 3000 ஆண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார் இந்த பாடலை பாடியதாக கூறினார். இந்தியா புத்த மதத்தை தான் வழங்கியதே தவிர யுத்தத்தை அல்ல என்றும், ஒரு நாட்டிற்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ள பயங்கரவாதத்தை வேரறுக்க அனைவரும் இணைய வேண்டும் என்றும் ஆவேசமாக பேசினார்.
Addressing the @UN General Assembly. Watch. https://t.co/N7J54af30s
— Narendra Modi (@narendramodi) September 27, 2019