ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இரு நாட்டு உறவுகள் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார்.
கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி இன்று விமானம் மூலம் புறப்பட்டு சென்று பங்கேற்றார். இதையடுத்து நடைபெற்ற மாநாட்டுக்கிடையே பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.
சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் சிரித்த முகத்துடன் கை குலுக்கி கொண்டனர். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகள் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் சீனா, பாகிஸ்தான், இந்தியா, ரஷ்யா உட்பட 8 நாடுகள் உறுப்பினராக உள்ளன.