Categories
தேசிய செய்திகள்

தேர்வு குறித்து மாணவர்களுடன் உரையாடும் மோடி!

பொதுத்தேர்வு எதிர்கொள்ளப் போகும் மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று நடத்துகிறார்.

நாடு முழுவதும் ஆண்டு பொதுத்தேர்வை எதிர்கொள்ளப் போகும் மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள ஆக்கப்பூர்வமான அறிவுரைகளை பிரதமர் மோடி இன்று வழங்கவுள்ளார்.

‘பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற பெயரில் ஆண்டுதோறும் மோடி இந்த சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியை மோடி நடத்திவருகிறார். 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்வின் மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி இன்று டெல்லியில் உள்ள டல்கடோரா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர் உள்ளிட்ட இரண்டாயிரம் பேர் பங்கேற்கப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் தொடங்கும் இந்நிகழ்வு நேரலையாக தொலைகாட்சி மற்றும் யூடியூப் போன்ற வலைதளங்களில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க நாடு முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

மாணவர்களிடம் உரையாற்றியபின் மோடி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார். கடந்தாண்டு மாணவர்கள் எழுப்பிய சிறந்த பத்து கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்தார்.

இந்த வருடம் இந்நிகழ்ச்சி ஜனவரி 16ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், அன்று நாடு முழுவதும் பண்டிகை தினம் என்பதால் நிகழ்ச்சி இன்று ஒத்திவைக்கப்பட்டது. பொங்கல் பண்டிகை அன்று மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்லாமா என 16ஆம் தேதி நிகழ்வுக்கு தமிழ்நாட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |