Categories
தேசிய செய்திகள்

“தரமற்ற பொருள்” அது சரி…. சீனா PRODUCT அப்புடி தான் இருக்கும்…. இந்தியர்கள் அதிருப்தி….!!

கொரோனா முதல் ரேபிட் டெஸ்ட் கிட் வரை விரிவான விபரங்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்றைக்கு உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் அண்டை நாடான இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் பாதிப்பை குறைப்பதற்காக மத்திய அரசும் ஊரடங்கு உத்தரவை மே 3 வரை பிறப்பித்துள்ளது. இன்னும் ஊரடங்கு முடிவதற்கு 12 நாட்களே உள்ள நிலையில்,

பாதிப்பு எண்ணிக்கை உயர்வது அச்சத்தை ஏற்படுத்துகிறது. தற்போது சோதனையை விரைவாக மேற்கொள்வதற்காக ரேபிட் டெஸ்ட் கிட் என்னும் கருவியை சீனாவிடமிருந்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் வாங்கி பயன்படுத்தி வந்தன. இதற்கான காரணம் கொரோனாவிற்கான அறிகுறியாக சொல்லப்படும் சளி-இருமல் உள்ளிட்டவை இல்லாமலேயே 80 சதவிகிதம் பேருக்கு கொரோனா இருப்பதாக தகவல் வெளியாகியது தான்.

ஆகவே பரிசோதனை மூலம் மட்டுமே பாதித்த நபர்களை கண்டறிய முடியும் என்பதற்காகவும், அதனை விரிவாக மேற்கொள்ளும் விதத்திலும் இந்த முயற்சியை நமது அரசு எடுத்தது. நமது அண்டை நாடான சீன நாட்டின் அதிபர் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம் கடற்கரையில் சந்தித்து பேசிய தருணத்தில், நம் நாட்டு மக்கள் சார்பில் பல்வேறு உபசரிப்புகள் அளிக்கப்பட்டது.

அந்த நட்புறவின் அடிப்படையில் அண்டை நாடு என்ற எண்ணத்திலும், சீனா நமக்கு உதவும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த கருவிகளை விலை கொடுத்து வாங்கினோம். ஆனால் அந்த நம்பிக்கைக்கு பாதகம் விளைவிக்கும் விதமாக, ராஜஸ்தானில் அசம்பாவிதம் ஒன்று நடந்துள்ளது. அதாவது இந்த ரேபிட் டெஸ்ட் கிட் கருவி தவறான முடிவுகளை காட்டுவதாக அம்மாநில அரசு ICMRயிடம் தெரிவித்ததுடன்,

அதை பயன்படுத்துவதை நிறுத்த போவதாகவும் கூறியுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருவியை அம்மாநில அரசு சீனாவிடமிருந்து வாங்கி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நட்பு நாடு என்கிற உரிமையில் இலவசமாக கருவியை கேட்காமல், பணம் கொடுத்து இந்திய அரசு வாங்கிய போதிலும் தரமற்ற பொருளை கொடுத்து சீனா ஏமாற்றியது இந்திய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |