ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற மோடியும் , இம்ரான்கானும் 9 மணி நேரம் ஒரே அறையில் இருந்து எவ்வித பேச்சும் இல்லாமல் அமைதியாக இருந்துள்ளனர்.
ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உட்பட பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் ஒரே இடத்தில் ஓன்று கூடினர். ஷாங்காய் மாநாட்டின் போது பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஆர்வம் காட்டியது. ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை முழுமையாக கைவிடாதவரை, பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்பு இல்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு, கிர்கிஸ்தான் நாட்டு அதிபர் வியாழக்கிழமை இரவு விருந்தளித்தார். அப்போது அதில் கலந்துகொண்ட தலைவர்கள் பரஸ்பரம் தலைவர்கள் கைகுலுக்கி பேசிக் கொண்டனர். இந்நிலையில் , பிரதமர் நரேந்திர மோடியும் , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ஒரே இடத்தில் சந்திக்கும் சூழல் உருவாகியதால் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதாகவும் , மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்காக பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியது.
ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. மாநாடு நடைப்பெற்ற அரங்கில் மோடியும், இம்ரான்கானும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதை அங்குள்ள அதிகாரிகள் உறுதி செய்துள்ள நிலையில் இருவருக்கும் இடையே நடைப்பெற்ற பேச்சு வார்த்தை குறித்த எந்த தகவலும் இல்லை. 2 நாட்களாக நடைப்பெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் 9 மணி நேரம் ஒரே அறையில் நேருக்கு நேர் அமர்ந்திருந்தும் கூட இருவரும் துளியளவும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகின்றது.