Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ட்விட்டரில் ”மாஸ்க்” அணிந்த மோடி – போட்டோவை மாற்றினார் …!!

ட்விட்டர் பக்கத்தில் இருந்த புகைப்படத்தை மாற்றி மாஸ்க் அணிந்து இருப்பது போன்ற புகைப்படத்தை பிரதமர் மோடி வைத்துள்ளார்.

உலக நாடுகளை மிரட்டி, சிம்ம சொப்பனமாக இருக்கும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கொரோனாவால் இந்தியாவில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு விதித்திருந்த 21 நாட்கள் ஊரடங்கை மேலும் 18 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.

இதனால் இன்றோடு முடிவடைய இருந்த ஊரடங்கு ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிந்து கொண்டு நாட்டு மக்களிடம் பேசிய மோடி பிரதமர் மோடி இதனை அறிவித்தார். இதனை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி வழக்கம் போல் இருக்கும் புகைப்படத்தை மாற்றி, முக கவசம் அணிந்து இருப்பது போன்ற புகைப்படத்தை வைத்துள்ளார். அவர் பேசும்போது மக்கள் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |