Categories
மாநில செய்திகள்

தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்ற மோடி ….. தொண்டர்களுக்கு கையசைத்தார் ….!!

சென்னை விமானநிலையத்தில் இருந்து கிளம்பிய பிரதமர் மோடி கோவள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்றடைந்தார்.

சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி மகாபலிபுரத்தின் அருகில் இருக்க கூடிய கோவளத்துக்கு விமானத்தில் கிளம்பினார். அதற்க்கு அவர் ஹெலிகாப்டர் தரை இறங்க திருவடந்தையில் விமான இறங்கு தளம் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு வந்தடைந்த பிரதமர் மோடியை வரவேற்க 200_க்கும் அதிகமான பாஜகவினர் கைகளில் பதாகைகளை வைத்துக் கொண்டு மோடியை வரவேற்று கோஷங்களை எழுப்பினார்.

பிரதமர் மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் வந்தார். பின்னர் அங்கிருந்து கோவளத்துக்கு  காரில் கிளம்பிய மோடி வரவேற்ற தொண்டர்களுக்கு கையசைத்துக் கொண்டே சென்றார்.அவர் தங்கும் நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும் சாலை முழுவதும் சிசிடிவி  கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.கோவளம் பகுதியில் இருக்கும் பிஷேர்மேன் கோவ் நட்சத்திர  ஓட்டலில் பிரதமர் தங்குகிறார். 

Categories

Tech |