அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டுநாள் பயணமாக இந்தியா வந்தார். சமர்பதி ஆசிரமம் சென்ற ட்ரம்ப் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அமெரிக்கா அதிபர் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படும் நிலையில் நாளை வரை அமெரிக்க அதிபர் இந்தியாவில் இருக்கின்றார்.
இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மோடி – ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது பதிலளித்த முதல்வர் அம்மா பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் என்னால் அங்கே கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.