Categories
அரசியல்

மோடி வந்தாலும் , மோடியின் டாடி வந்தாலும் அதிமுக_வை காப்பாற்ற முடியாது… டிடிவி தினகரன் சாடல்…!!

 இடைத்தேர்தலில், அதிமுக 8 இடங்களில் வெற்றிபெறாவிட்டால் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை பிரதமர் மோடி அல்ல மோடியின் டாடி வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்

பொள்ளாச்சி தொகுதி போட்டியிடும் அமமக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடுமலை பேருந்துநிலையம் முன்பு பரப்புரை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய டிடிவி தினகரன், “ ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள்   அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்திருப்பார்கள். ஆனால் இப்போது இந்த வழக்கில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தலையீடு இருப்பதால் காவல்துறையினர் மூடி மறைக்கப் பார்க்கின்றனர். தமிழகமே அதிர்ச்சி அடைந்த இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று கூறினார்.

டிடிவி தினகரன் க்கான பட முடிவு

மேலும் பேசிய TTV. தினகரன் கொங்குமண்டலத்தை சார்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டு உயர்மின் கோபுரத்தை அமைக்க முயற்சிக்கின்றார்கள். இதுகுறித்து அமைச்சர் தங்கமணியிடம் விவசாயிகள் கேள்வி கேட்டபோது மத்திய அரசின் திட்டத்தை எங்களால் ஒன்று செய்யமுடியாது என்று கூறுகின்றார்.வருகின்ற 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் , அதிமுக 8 இடங்களில் வெற்றிபெறாவிட்டால், தமிழகத்தில் இப்போது இருக்கும் ஆட்சியை பிரதமர் மோடி அல்ல மோடியின் டாடி வந்தாலும் காப்பாற்ற முடியாது” என்று TTV தினகரன் தெரிவித்தார்.

Categories

Tech |