எஸ் பேங்க்கை ரிசர்வ் வங்கி தனது முழுக்கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் எஸ் பேங்க்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.இது குறித்த அறிக்கையை வெளியிட ரிசர்வ் வங்கி , எஸ் பேங்க்கின் முழு நிர்வாகமும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வருவதால் , வாடிக்கையாளர் வைத்திருக்கும் வைப்பு தொகையில் ரூ 50,000 மட்டுமே எடுக்க முடியும் என்றும் , திருமண செலவு , மருத்துவ செலவு என அவசரத்திற்காக அதற்கு மேல் எடுக்க வேண்டுமென்றால் வங்கி மேலாளரிடம் கடிதம் எழுதிக் கொடுத்து எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் எஸ் பேங்க் வங்கியை நிர்வகிக்க எஸ்பிஐ தலைவர் பிரசாத் குமாரை ரிசர்வ் வங்கி நியமித்து உத்தரவிட்டுள்ளது. பொது மக்களின் நன்மதிப்பை பெறுவதற்காகவே இந்த நடவடிக்கை என்றும் , பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிருந்தது. ரிசர்வ் வங்கியில் இந்த நடவடிக்கை விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் YES வங்கி இல்லை வங்கி. மோடியும் அவரது கருத்துக்களும் இந்தியாவின் பொருளாதாரத்தை அழித்துவிட்டன என்று விமர்சித்துள்ளார்.
No Yes Bank.
Modi and his ideas have destroyed India’s economy.
— Rahul Gandhi (@RahulGandhi) March 6, 2020