Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : 11 நாளில் 1 லட்சம் பேரை தாக்கும் – மோடி கவலை …!!

கொரோனா அடுத்த 11 நாளில் 1 லட்சம் பேரை தாக்கும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உறையாற்றினார். அதில் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு. நாடு மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும். ஆனால், இதனை தொடருவதை தவிர வேறு வழி இல்லை. ஒவ்வொரு குடிமகனையும் காப்பாற்றுவதே என் முதல் பணி.

“சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் அதனால் தான் சிரமப்படுகின்றன.  “மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் அமெரிக்கா, இத்தாலியும் திணறுகின்றன. அந்த நாடுகளில் இருந்து பெற்ற படிப்பினை மூலம், கொரோனாவை ஓரளவு தடுக்கலாம்.

அடுத்த 11 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேரை தாக்கும். இதன் மூலம், கொரோனா எவ்வளவு வேகமாக பரவும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். கொரோனா பரவத் தொடங்கினால், அதை தடுத்து நிறுத்துவது பெரிய சவால் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Categories

Tech |