Categories
உலக செய்திகள்

முதலில் பாம்பு… இப்போ உடல் முழுக்க வெடிகுண்டுகள்… மோடியை மீண்டும் மிரட்டும் பாக் பாடகி..!!

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான்  சேர்ந்த பாடகி ஒருவர் உடலில் மனித வெடிகுண்டை கட்டிக் கொண்டு மிரட்டல் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பாடகியான ரபி பிர்ஜடா ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உடலில் டைமர் எனப்படும் கடிகாரத்துடன் கூடிய மனித வெடிகுண்டை கட்டிக்கொண்டு இடுப்பில் கை வைத்தபடி உள்ளார். அந்த பதிவில் ‘மோடி ஹிட்லர், காஷ்மீரின் மகளாக நான் விரும்புகிறேன்’ என்றும் பதிவிட்டுள்ளார்.

Image result for #ModiHitler

இந்த காணொலி பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவிற்கு பதிலடியாக இந்தியர் ஒருவர் பதிலளித்ததாவது, ‘பாகிஸ்தானின் கலாசார உடையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’ என்று தெரிவித்திருந்தார். மற்றொருவர் ‘பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உங்கள் நாட்டின் தேசிய உடையாக, இந்த உடையை அறிவிக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

Image result for #ModiHitler

பாடகி ரபி பிர்ஜடா இத்தகைய சர்ச்சைப் பதிவு இடுவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, செப்டம்பர் மாதம் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சில பாம்புகளையும், முதலைகளையும் கட்டவிழ்த்துவிட்டு, பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவிட்டிருந்தார்.

Image result for #ModiHitler

இந்த விவகாரத்தில் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் அவர் மீது புகார் அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக லாகூர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த காணொலிக்கு செய்தி நிறுவனங்களுக்கு விளக்கமளித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்த சர்ச்சைப் பாடகி.

Categories

Tech |