Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஒரே தேர்தல் நடத்த மோடி தலைமையில் ஆலோசனை…மம்தா புறக்கணிப்பு ….!!

ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் தலைமையில் நடைபெறும் அஆலோசனை கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்துள்ளார்

பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி, ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மாநில சட்டப்பேரவை , மக்களவை என அடிக்கடி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் பண இழப்பு , அதற்கான நேரம் வீணாவது போன்ற காரணங்களை முன்வைத்து ஒரே தேர்தலை நியாயப்படுத்தி வருகின்றது மத்திய பாஜக அரசு.

இந்நிலையில் ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 3 மணிக்கு  அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யபட்டுள்ளது.இந்த கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி புறக்கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமிருக்கு எழுதியுள்ள  கடிதத்தில் , ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் அவசர அவசரமாக முடிவு எடுக்காமல் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |