முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அனைவரும் திரளாக வந்து வாக்களியுங்கள் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு துவங்கியுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வேண்டுகோள் வைத்துள்ளார். அதில், முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள மக்கள் சாதனை படைக்கும் வகையில் பெரிய எண்ணிக்கையில் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக முதல் முறை வாக்களிக்க போகும் இளைஞர்கள், அதிக அளவில் வந்து வாக்களிக்க வேண்டும்” என்று மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
2019 Lok Sabha elections commence today.
I call upon all those whose constituencies are voting in the first phase today to turn out in record numbers and exercise their franchise.
I specially urge young and first-time voters to vote in large numbers.
— Narendra Modi (@narendramodi) April 11, 2019