மோடி தலைமையிலான பாஜக அரசு மூழ்கும் கப்பல் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்தியாவில் அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி_க்கு மாற்றாக சமஜ்வாதியும் , பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.
இந்நிலையில் இன்று லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறுகையில் , கடந்த தேர்தலில் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் பாஜகவிற்கு எதிரான மனநிலையில் இருக்கின்றனர். மோடியால் மக்கள் ஏற்கனவே ஏமாந்து விட்டனர். இனியும் அவர்கள் ஏமாற மாட்டார்கள். பிரதமர் மோடி மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது. மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மூழ்கும் கப்பல் என்று மக்கள் அனைவருக்கும் தெரியும் என்று விமர்சித்துள்ளார்.