அரியலூர் அருகே பாரத பிரதமர் மோடியின் வீடு கட்டும் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை அம்மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1356 வீடுகள் செந்துறை ஊராட்சி உட்பட்ட பகுதிகளில் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான வேலைகள் விரைந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இதுவரை ஒரு லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 854 வீடுகள் கட்டப்பட்ட நிலையில் 502 வீடுகள் கட்டுமான பணிகளில் உள்ளன. இதையடுத்து வீடுகள் தரமானவையாக உள்ளனவா? உரிய நேரத்தில் பணிகள் நிறைவடைகின்றனவா? என்பது குறித்து ஆராய்ச்சி செய்ய வந்தோம் அனைத்தும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என்று அவர் தெரிவித்தார்.