Categories
தேசிய செய்திகள்

கொரோனா நிவாரணம் : மோடியின் தாயார் ரூ. 25,000 அனுப்பினார் ..!!

பிரதமர் மோடியின் தாயார் ஹிராபா பிரதமரின் பொது  நிவாரண நிதிக்கு பணம் அனுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுக்க 38,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 8 லட்சத்தை தாண்டியது. இந்தியாவிலும் இந்த வைரசால் 32 பேர் உயிரிந்துள்ள நிலையில் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி அளிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். கொரோனா வைரஸால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பினை ஈடுசெய்ய பல்வேறு தரப்பினர் பிரதமரிடம் நிவாரண நிதி கொடுத்து உதவி வருகின்றனர். அந்த வரிசையில்  பிரதமர் மோடியின் தாயார் ஹிராபா தான் சேமித்து வைத்த ரூ. 25,000 பணத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார்.

Categories

Tech |