செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வெங்கையாநாயிடு சொன்னது சரிதான். ஏனென்றால் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஆளுங்கட்சிகள் மெஜாரிட்டி இருப்பதினால், கூச்சல் போட்டே அவர்கள் பேசவிடாமல் செய்வதினால் தான், எதிர் கட்சியினர் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். அதை அவர்கள் நடுநிலையோடு, அவர்களுடைய அரசியல் அனுபவத்தோடு, வெங்காய நாயுடு அவர்கள் சொல்லி இருக்கிறார்கள், அதை ஆளுகிற கட்சி பின்பற்றினால் நல்லது.
தேசிய கொடியை தான் ஏற்ற சொல்லியிருக்கிறார்கள். கட்சி கொடியை ஏற்ற சொல்லவில்லை, தேசியக் கொடியைத்தான் சொல்லியிருக்கிறார்கள். அது நல்ல திட்டம் தானே. அது 75 ஆண்டுகள் சுதந்திரம் பெற்றதற்கான அடையாளத்தை ஞாபகப்படுத்துகின்ற ஒரு முயற்சி தானே. அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகத்தோடு லட்சிய ரீதியாக உடன்பாடு கொண்டு, சனாதன சகதிகளை வீழ்த்துவதற்கும், ஏகாதிபத்திய சக்திகளை வீழ்த்துவதற்கும், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்று சொல்லக்கூடிய இந்த ஏகாதிபத்திய பாசிச சிந்தனைகளை கொண்ட கட்சிகளை வீழ்த்துவதற்கும்,
அண்ணாவின் வழியிலே கலைஞர் எப்படி கொள்கைகளை பாதுகாத்து வந்தாரோ அதேபோல, திராவிடம் மாடல் ஆட்சி என்று சொல்லி, திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைவரும், இன்றைய முதலமைச்சருமான திரு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
புதிய திட்டங்களை அறிவிக்கிறார்கள். வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு திட்டங்கள் அறிவிக்கப்படவுமில்லை, செயல்படுத்தப்படவும் இல்லை. ஆகவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி கொள்கை ரீதியான, ஆட்சி திராவிட இயக்க லட்சிய ரீதியான ஆட்சி என்ற வகையில் அவர்கள் செயல்பட்டு வருவது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. நல்ல புரிதல் இருக்கிறது, நல்ல ஒன்றிணைப்பு இருக்கிறது ,நல்ல தோழமை இருக்கிறது அந்த வகையிலே நாங்கள் வெற்றி பெற்று செல்வோம் என்று நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என தெரிவித்தார்.,