Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மீண்டும் பிரதமராகும் மோடி” பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து…!!

மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகிள்ளதால் பிரதமர் மோடிக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பல்வேறு நட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மோடியே மீண்டும் பிரதமராக நீடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதே போல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , நடிகர் ரஜினிகாந்தும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |