Categories
பல்சுவை

மோடி பதவி ஏற்பு “ஏற்றம் கண்ட பங்குகள்” முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!!

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்றதையடுத்து இன்று பங்குசந்தை நல்ல ஏற்ற நிலையை அடைந்துள்ளது.

பங்கு சந்தை :

பங்குச் சந்தை என்பது ஒரு பொதுச் சந்தை. இங்கு நிறுவனங்களின் பங்குகள் விலைக்கு விற்பனை செய்யப்படும். பங்குச் சந்தையில் சிறிய தனிநபர் முதல் மிகப்பெரும் பணக்காரர்கள் வரை  எங்கிருந்து வேண்டுமானாலும் பங்குபெறலாம் . பங்குச் சந்தை நிறுவனங்களின் பணத்தை அதிகரிக்கும் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இது நிறுவனத்தின்  பங்குகளை விற்று கூடுதல் முதலீட்டுத் தொகையை பெறவும் வழிவகுக்கிறது .

sensex க்கான பட முடிவு

மும்பை பங்கு சந்தை :

மும்பை பங்குச் சந்தை ஆசிய கண்டத்தின் மிகப் பழைய பங்குச் சந்தை இதுவாகும். இந்தியாவின் தலைநகர் மும்பையின் தலால் வீதியில் அமைந்துள்ளஇந்த பங்குசந்தை  1875 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஆசியாவில் 4_ஆவது மற்றும் உலகின் 8_ஆவது பெரிய பங்குச் சந்தை ஆகும்.

தேசியப் பங்கு சந்தை 

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய பங்கு சந்தை 1993_ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  மொத்தச் சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் இதுவே  ஆசியாவின்  இரண்டாவது பங்குச் சந்தை. உலகளவில் வளர்ந்து வரும் பங்குச்சந்தைகளில் இரண்டாம் நிலையில் உள்ளது. தேசியப் பங்குச் சந்தை, ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி முதல் மாலை 3.30 வரை செயல்படும்.

sensex க்கான பட முடிவு

சென்செக்ஸ்:

பி.எஸ்.இ சென்செக்ஸ் (BSE Sensex) மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் என்பது 30 நிறுவனங்களின் பங்குகளுக்கான இன்டெக்ஸ் உருவாக்கப்பட்டு, அது சென்செக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

நிஃப்டி :

என்.எஸ்.இ நிஃப்டி  (NSE NIFTY) நிஃப்டி என்பது இந்தியாவில் உள்ள தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பிரபலமான 50 கம்பெனிகளுடைய பங்குகளின் இன்டெக்ஸ் ஆகும்.

பங்குசந்தை நிலவரம் : 

நேற்று (30/05/19) மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 39,580.28 புள்ளிகளில் தொடங்கி ய 39,911.92 வரை உயர்ந்து 329.92 பு்ளளிகள் உயர்ந்து 39,831.97 எனவும், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 11,865.30 புள்ளிகளில் தொடங்கி 84.80 புள்ளிகள் உயர்ந்து 11,945.90 ஆக உள்ளது. பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்றதால் குறியீட்டெண்கள் புதிய உச்சத்தை அடைந்துள்ளன.

Categories

Tech |