கொரோனா வைரஸ் பரவி வருவதால் மெத்தனமாக இருக்க வேண்டாம் என திரௌபதி பட இயக்குனர் மோகன் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்படியான சூழ்நிலையில் மக்கள் அரசின் அறிவுரையை கேட்காமல் அலட்சியமாக சிலர் சுற்றி வருகின்றனர். இது குறித்து பல பிரபல இயக்குனர்கள், நடிகர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், திரௌபதி திரைப்பட இயக்குனர் மோகன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். எல்லாம் சரியாகி விட்டது என்று மெத்தனமாக இருக்க வேண்டாம். இப்போதுதான் நமது ஊரில் கொரோனா ஆரம்பமாகியிருக்கிறது. அடுத்த இரண்டு வாரத்திற்கு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே அதனை வென்றிட முடியும். ஆகவே மெத்தனத்தை கைவிட்டுவிட்டு வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். StayhomeStaysafe இதுவே இப்போதைக்கு உள்ள ஒரே வழி என்று ட்விட் செய்துள்ளார்.