Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் மோகன்லாலின் ‘திரிஷ்யம் 2’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘திரிஷ்யம் 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 -ல் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘திரிஷ்யம்’ . பாலியல் தொல்லை கொடுத்த ஒரு இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை தான் இது . இந்தப் படத்தின் வெற்றி இந்தியாவில் உள்ள அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது . தமிழில் இந்தப் படம் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது.

திரிஷ்யம் 2

மேலும் கன்னடம் ,தெலுங்கு, சீன மொழிகளிலும் இந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது . தற்போது ஏழு வருடங்களுக்குப் பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது . ஜித்து ஜோசப் இயக்கியுள்ள இந்தப் படத்திலும் மோகன்லால் ,மீனா ஆகியோர் நடித்துள்ளனர் ‌. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இந்நிலையில் ‘திரிஷ்யம் 2’ படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |