பிரபல நடிகர் மோகன்லால் சென்னையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் நேற்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தனது பிறந்த நாளை படப்பிடிப்பு தளத்தில் வருடந்தோறும் சிம்பிளாக கொண்டாடிவரும் மோகன்லால் இந்த வருட பிறந்த நாளை சென்னையில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.