Categories
ஆன்மிகம் இந்து

மொய் வைக்கும்போது எதற்காக… “101, 201, 501, 1001 அப்படின்னு ஒரு ரூபாய சேர்த்து வைக்கிறோம்”… சொல்லுங்க பாக்கலாம்..!!

நாம் மொய் செய்கையில் குறிப்பிட்ட தொகையுடன்  எப்போதும் ஒரு ரூபாய் சேர்த்து வைத்து மொய் தருகிறோம். அதற்கு காரணம் என்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம்.

கல்யாணம், காது குத்து, கிரகப்பிறவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளின்போது மொய் செய்யும் பழக்கம் நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. மொய் செய்யும் போது நூறு, ஐந்நூறு, ஆயிரம் என்று மொய் செய்யாமல் அதனுடன் ஒரு ரூபாய் வைத்து மொய் செய்வது ஏன்?

ஒவ்வொரு வழக்கத்திற்கும் ஒரு காரணம் உண்டு. இப்படி ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்வதற்கும் ஒரு காரணம் உண்டு. அந்தக்காலத்தில் பணம் என்பது பொன் மற்றும் வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகத்தில் நாணயங்கள் வடிவத்தில் உருவாக்கப்பட்டு புழக்கத்தில் இருந்து வந்தன. அதுவும் சும்மா இல்லை ஒரு வராகன் பொன் என்பது 32 குண்றி எடை (குண்டுமணி) அந்த 32 என்பது, முப்பத்து இரண்டு வகையான தர்மங்களைக் குறிப்பது. எனவேதான் இது தர்மம் தவறாது சம்பாதித்த நாணயம்.

இதை நீங்களும் தர்மம் வழுவாமல் செலவிடுங்கள் என்பதை நினைவூட்டும்வகையில் இந்த மொய்ப்பணமும் அந்தக் காலத்தில் மதிப்புமிக்க உலோக நாணயங்களினால் வழங்கப்பட்டு வந்தது. அதனால், மொய் செய்பவருக்கும் தான் ஒரு மதிப்புமிக்க பொருளை அன்பளிப்பாக கொடுத்ததாக ஒரு மனநிறைவு இருந்தது. ஆனால் நோட்டுக்கள் என்கிற ரூபாய் தாள்கள் புழக்கத்தில் வந்து நாணயத்தின் இடத்தைப் பிடித்துக் கொண்டன. நோட்டுத்தாள்கள் உலோக நாணயங்களை போல் உண்மை மதிப்பு கொண்டவை அல்ல.

எனவே ரூபாய் தாளை மொய்ப்பணமாக கொடுப்பவர் மனதில் தான் ஓர் உண்மையான மதிப்பு கொண்ட பணத்தை மொய்யாக செய்யவில்லை என்ற மனக்குறை இருந்தது. எனவே மொய்ப்பணமாக வைக்கும் ரூபாய் தாளுடன் மெய்யான மதிப்பு கொண்ட வெள்ளி ஒரு ரூபாய் நாணயத்தையும் சேர்த்துக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கி மனக்குறையை போக்கிக் கொண்டனர்.

அந்தக் காலத்தில் மதிப்புமிக்க வெள்ளியில்தான் நாணயங்கள் உருவாக்கப்பட்டன. அவையே பணமாக புழக்கத்தில் இருந்து வந்தன. எனவே தான் நாம் மொய்ப்பணம் வைக்கும் பழக்கத்தில் பதினொன்று, ஐம்பத்தியொன்று, நூற்றியொன்று, ஐந்நூற்றியொன்று, ஆயிரத்தியொன்று என்று ஒரு ரூபாய் சேர்த்து வைக்கும் பழக்கம் மரபானது. சுபகாரியங்களில் மொய் செய்வதும் ஒரு நல்ல பழக்கம் தான். அதனால் தான் முன்னோர்கள் இப்படி ஒரு வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |