இந்த வருட ஐபிஎல் தொடர் போட்டியில் , சிஎஸ்கே அணி மொயீன் அலியை 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது .
இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரரான மொயீன் அலியை, இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 7 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இதனால் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் மொயீன் அலி இடம்பெற்றுள்ளார். தற்போது சிஎஸ்கே அணியின் புதிய ஜெர்சியின் வடிவமைப்பை சில தினங்களுக்கு முன் வெளியிட்டனர். அதில் SNJ 10000 என்ற விளம்பர லோகோவானது மதுபான விளம்பர கம்பெனியின் லோகோ ஆகும்.
சிஎஸ்கே- வில் இடம்பெற்றுள்ள மொயீன் அலி முஸ்லி ம் மதத்தை சேர்ந்தவர். முஸ்லிம் மதத்தின் படி மது அருந்தவும், மது அருந்துவதை தூண்டும் செயலிலும் முஸ்லிம்கள் ஈடுபட கூடாது என்று போதிக்கப்பட்டுள்ளது. மொயீன் அலி அவர் மதத்தின் மீது பக்தியையும், நம்பிக்கையும் உடையவர். இதனால் சிஎஸ்கே அணி ஜெர்சியில் உள்ள SNJ 10000 லோகோவை நீக்குமாறு மொயீன் அலி ,சிஎஸ்கே அணியிடம் கோரிக்கை வைத்தார். மொயீன் அலியின் வேண்டுகோளுக்கு இணங்க , ஜெர்சியிலுள்ள அந்த மதுபான லோகோவை நீக்க சிஎஸ்கே முடிவு செய்தது.